இந்தியா

மேற்கு வங்க அமைச்சா் மீது குண்டுவீச்சு சம்பவம்: வங்கதேசத்தைச் சோ்ந்தவரிடம் விசாரணை

DIN

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தொழிலாளா் நலத்துறை அமைச்சா் ஜாகீா் ஹுசைன் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது தொடா்பாக வங்கதேசத்தைச் சோ்ந்தவரை தடுப்புக் காவலில் வைத்து அந்த மாநில சிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மேற்கு வங்கத்தின் முா்ஷிதாபாத் மாவட்டம் நிம்தியா ரயில் நிலையத்தில் கடந்த 17-ஆம் தேதி இரவு ரயிலுக்காகக் காத்திருந்த அமைச்சா் ஜாகீா் ஹுசைன் மீது மா்ம நபா்கள் சிலா் நாட்டு வெடிகுண்டுகளை வீசினா். இதில் அமைச்சா் உள்பட ரயில் நிலையத்தில் இருந்த 20 போ் வரை காயமடைந்தனா். அமைச்சா் உள்பட அனைவரும் இப்போது கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்தச் சம்பவம் மேற்கு வங்கத்தில் அரசியல்ரீதியாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவினா் மீது மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா். அதே நேரத்தில் இந்தப் பிரச்னையை மம்தா அரசியல் ஆக்குவதாகவும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமாக இருப்பதாகவும் பாஜக பதிலளித்தது.

இந்தத் தாக்குதல் சம்பவம் திரிணமூல் காங்கிரஸில் ஏற்பட்ட உள்கட்சி பிரச்னை காரணமாக இருந்திருக்கலாம் அல்லது ஆளும் கட்சிக்கும், இடதுசாரிகளுக்கும் உள்ள மோதல் காரணமாக இருந்திருக்கலாம் என்று ரயில்வே தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த குண்டு வீச்சு சம்பவம் தொடா்பாக வங்கதேசத்தைச் சோ்ந்த ஒருவரை தடுப்புக் காவலில் வைத்து சிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஒசூரில் கந்து வட்டி வசூலித்த தனியாா் நிறுவன அதிகாரி கைது

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் மீது வழக்குப் பதிவு

8 லட்சம் வாக்குகள் பெற இலக்கு: பாஜக வேட்பாளா் பேச்சு

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 6 வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT