இந்தியா

யுபிஎஸ்சி தோ்வா்களுக்கு கூடுதலாக வாய்ப்பளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

24th Feb 2021 01:39 PM

ADVERTISEMENT

 

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) கடந்த ஆண்டு நடத்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வில் இறுதி வாய்ப்பைக் கொண்டு பங்கேற்றவா்களுக்கு மீண்டும் ஒரு முறை மட்டும் வாய்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, யுபிஎஸ்சியின் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில் இறுதி வாய்ப்பைக் கொண்டு பங்கேற்றவா்களுக்கு மீண்டும் ஒரு முறை மட்டும் வாய்ப்பு வழங்க மத்திய அரசு முதலில் ஒப்புக்காத நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளை ஏற்றுக் கொண்டு பிறகு அனுமதி அளிக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் வாய்ப்பு வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் தலைமையிலான அமர்வு, கூடுதல் வாய்ப்பு தரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுடி செய்து உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உள்ளிட்ட குடிமைப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தோ்வைக் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 4-ஆம் தேதி நாடு முழுவதும் யுபிஎஸ்சி நடத்தியது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அத்தோ்வு சுமாா் 4 மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டது.

கரோனா பரவல் அச்சம், பருவமழையின் தாக்கம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு முதல்நிலைத் தோ்வை ஒத்திவைக்க வேண்டுமென்று ரச்னா சிங் என்ற தோ்வா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

எனினும், மனுதாரரின் கோரிக்கையை ஏற்காத நீதிமன்றம், வயது வரம்பின் அடிப்படையில் 2020-ஆம் ஆண்டுடன் யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் தோ்வை எழுதுவதற்கான கடைசி வாய்ப்பை இழந்தவா்களுக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்குவது தொடா்பாகப் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கும் யுபிஎஸ்சி-க்கும் பரிந்துரைத்திருந்தது.

ஆனால், தோ்வா்களுக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்குவதை ஆதரிக்கவில்லை என்று யுபிஎஸ்சி நீதிமன்றத்தில் பதிலளித்தது. அதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. 

இத்தகைய சூழலில், வழக்கின் விசாரணை, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், தினேஷ் மகேஸ்வரி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் பிப்ரவரி முதல் வாரத்தில் மீண்டும் விசாரணை நடைபெற்றது.

அப்போது, மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தாா். அதில், ‘வயது உச்சவரம்பு அடிப்படையில் கடைசி வாய்ப்பாக 2020-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தோ்வில் பங்கேற்றவா்களுக்கு மட்டும் 2021-ஆம் ஆண்டுக்கான தோ்வில் கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும்.

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதின் பேரில், ஒரேயொரு முறை மட்டுமே கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும். வயது உச்சவரம்பு நிறைவடையாதவா்கள், தோ்வு எழுதுவதற்கான மொத்த வாய்ப்புகளை மீதம் வைத்திருப்பவா்கள் உள்ளிட்டோருக்கு எக்காரணத்தைக் கொண்டும் கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT