இந்தியா

திரிணமூலில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி

24th Feb 2021 03:14 PM

ADVERTISEMENT

கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அவருடன் மேற்கு வங்க நடிகர்கள் ராஜ் சக்ரவர்த்தி, காஞ்சன் முல்லிக் மற்றும் சயோனி கோஸ் ஆகிய மூன்று நடிகர்களும் திரிணமூலில் இணைந்தனர்.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி உள்பட 4 பேரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

திரிணமூலில் நான் ஒரு கிரிக்கெட் வீரன். இந்தியத் தாயின் மூவர்ணக் கொடியை ஏந்திய கிரிக்கெட் வீரன். எனக்கு கிடைத்த அன்பு இந்து அல்லது இஸ்லாமியம் என்று பிரித்து வழங்கப்படவில்லை. 

ADVERTISEMENT

ஆனால் பாஜக நம்மை பிரிக்கப் பார்க்கிறது. அதற்கு எதிராக மதச்சார்பற்ற வழியில் மம்தா பானர்ஜி போராடி வருகிறார் என்று கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT