இந்தியா

நாட்டில் புதிதாக 13,742 பேருக்கு கரோனா 

24th Feb 2021 10:28 AM

ADVERTISEMENT

 

புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,742 ஆக உள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,10,30,176 ஆக உயர்ந்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 13,742 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,10,30,176-ஆக அதிகரித்தது. 

ADVERTISEMENT

அதே காலகட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 104 போ் உயிரிழந்தனா். இதனால் நாடு முழுவதும் கரோனாவால் ஏற்பட்ட ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,56,567-ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரை கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,07,26,702 போ் குணமடைந்தனா். நாட்டில் தற்போது 1,46,907 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

ADVERTISEMENT
ADVERTISEMENT