இந்தியா

உத்தரகண்ட் வெள்ளம்: 68 உடல்கள் கண்டெடுப்பு; 136 பேர் காணவில்லை

22nd Feb 2021 07:42 PM

ADVERTISEMENT


உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து வெள்ளம் ஏற்பட்ட சம்பவத்தில் இதுவரை 68 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து, அங்குள்ள தௌலி கங்கா, ரிஷி கங்கா, அலக் நந்தா நதிகளில் கடந்த 7-ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த இரண்டு மின் நிலைய கட்டுமானப் பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த சுரங்கங்களில் வெள்ள நீர் புகுந்தது. அதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 

அந்தப் பகுதிகளில் மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மீட்புப் பணி நிலவரத்தின் சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை மொத்தம் 68 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் 39 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 29 உடல்கள் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. 136 பேர் இன்னும் கண்டறியப்படவில்லை.
 

ADVERTISEMENT

Tags : Uttarkhand flood
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT