இந்தியா

அசாமில் ரூ.3,222 கோடி மதிப்பிலான 5 திட்டங்களை தொடங்கி வைத்தார் மோடி

22nd Feb 2021 03:29 PM

ADVERTISEMENT


குவகாத்தி: விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் அசாமில் ரூ.3,222 கோடி மதிப்பிலான ஐந்து நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வத்தார்.

எண்ணெய், எரிவாயுத் திட்டம் மற்றும் கல்வித் தொடர்பான திட்டங்களும் இதில் அடங்கும்.

 

நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,  மத்தியிலும், அசாம் மாநிலத்திலும் உள்ள பாஜக அரசுகள் இணைந்து மாநிலத்தை வளா்ச்சிப் பாதையில் வேகமாக கொண்டு செல்கின்றன. தொடர்ந்து மாநிலம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க மத்திய - மாநில அரசுகள் எனும் இரண்டு இஞ்ஜின்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். அசாமில் ஆளும் அரசு, மாநிலத்தை அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை நோக்கி பயணிக்க வைக்கிறது என்றார்.

ADVERTISEMENT


இந்த நிகழ்ச்சியில், கட்டி முடிக்கப்பட்ட பொறியியல் கல்லூரியைத் தொடங்கி வைத்தும், புதிய பொறியியல் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
 

Tags : assam pm modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT