இந்தியா

மகாராஷ்டிர அமைச்சர் சாகன் புஜ்பாலுக்கு கரோனா பாதிப்பு

22nd Feb 2021 12:54 PM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிரத்தின் உணவு, சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் சாகன் புஜ்பாலுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அவர் டிவிட்டர் பதிவில் கூறியதாவது, 

நான் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்புகொண்டவர்கள் தங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டுகிறேன். 

ADVERTISEMENT

என் உடல்நலம் தற்போது நன்றாக உள்ளது. கவலைப்படத் தேவையில்லை. கரோனா வைரஸைத் தடுக்க அனைத்து குடிமக்களும் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என புஜ்பால் மராத்தியில் ட்வீட் செய்துள்ளார். 

சாகன் புஜ்பாலை தவிர, ஜெயந்த் பாட்டீல், ராஜேஷ் டோப், அனில் தேஷ்முக், ராஜேந்திர ஷின்கானே, மற்றும் பச்சுகாடு ஆகிய அமைச்சர்கள் சமீபத்தில் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். 

நாட்டில் மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்டிரம் திகழ்கிறது. இதுவரை அம்மாநிலத்தில் 19,94,947 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். 54,149 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதித்த 1,788 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : Maharashtra positive coronavirus minister Chhagan Bhujbal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT