இந்தியா

மகாராஷ்டிரத்தில் பேருந்து மீது கார் மோதல்: 5 பேர் பலி 

22nd Feb 2021 11:15 AM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிரத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தேவ்கட் ஃபாடாவில் அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அவுரங்காபாகத் நோக்கிச் சென்ற கார் அகமது நகருக்குச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக நெவசா காவல்நிலைய அதிகாரி தெரிவித்தார். 

கார் சாலை தடுப்பு மீது மோதி எதிர்த்திசையில் வந்த பேருந்து முது மோதியதாக அகமதுநகர் காவல்நிலைய கட்டுப்பாட்டு அறையைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி தெரிவித்தார். 

ADVERTISEMENT

ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக நெவாசா கிராம மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. 

உயிரிழந்தவர்கள் சாந்தனு நாராயண் காக்தே (35), கைலாஸ் நியூரே (35), விஷ்ணு சவான் (31), ரமேஷ் தஷ்ரத் குகே (40), கார் ஓட்டுநர் நாராயண் வர்காட் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

மேலும், விபத்து குறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

Tags : மகாராஷ்டிரா சாலை விபத்து Maharashtra
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT