இந்தியா

மீண்டும் அதிகரிக்கும் கரோனா: இந்தியாவில் ஒரேநாளில் 14,199 பேருக்கு கரோனா

22nd Feb 2021 09:51 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 14,199 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 14,199 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. 
இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,10,05,850-ஆக அதிகரித்தது. கரோனா தொற்றில் இருந்து மேலும் 9,695 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,06,99,410-ஆக அதிகரித்தது. 
கரோனா தொற்றுக்கு மேலும் 83 போ் உயிரிழந்தனா். இதனால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,56,385-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 1,50,055 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 
நாடு முழுவதும் இதுவரை 1,11,16,854 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT