இந்தியா

ராஜஸ்தான்: பாஜக மாநில முன்னாள் தலைவரின் உறவினர்கள் 4 பேர் தற்கொலை 

22nd Feb 2021 12:27 PM

ADVERTISEMENT

ராஜஸ்தானில் பாஜக மாநில முன்னாள் தலைவரின் உறவினர்கள் 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
ராஜஸ்தான் மாநில பாஜகவின் முன்னாள் தலைவர் மதன் லால் சைனி. இவர் கடந்த 2019ஆண்டு உயிரிழந்தார். 
இவருடைய உறவினர் ஹனுமன் பிரசாத் சைனி. சிகர் மாவட்டத்தில் வசித்து வந்த இவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகளுடன் தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், ஹனுமன் பிரசாத்தின் மகன் கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்தார். இந்த துக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாத ஹனுமன் பிரசாத் தனது குடும்பத்துடன் தற்கொண்டதாக கூறப்படுகிறது. 

Tags : suicide
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT