இந்தியா

இளைஞர்கள் விரும்பும் மாற்றத்தை தாமரை தரும்: மேற்கு வங்கத்தில் மோடி

22nd Feb 2021 07:06 PM

ADVERTISEMENT


மேற்கு வங்கத்தில் இளைஞர்கள் விரும்பும் மாற்றத்தை தாமரை தரும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஹூக்லியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மோடி பேசியது:

"பண கலாசாரம், மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்டவை இருக்கும் வரை மேற்கு வங்கத்தில் வளர்ச்சி என்பது சாத்தியமில்லை. அரசியல் மாற்றத்துக்காக மட்டுமில்லாமல் மேற்கு வங்கத்தின் மாற்றத்துக்காகவே பாஜக அரசு அமைய வேண்டும்.   

இளைஞர்கள் விரும்பும் அந்த மாற்றத்தை தாமரை கொடுக்கும். நிஜ மாற்றத்தின் நம்பிக்கையில் இளைஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் மேற்கு வங்கத்தில் பாஜக அரசை அமைக்க வேண்டும்.

ADVERTISEMENT

மாநிலத்தின் வளர்ச்சிக்காக தொழில் துறை கொள்கைகளில் பாஜக அரசு மாற்றங்கள் கொண்டு வரும். உடனடி மாற்றத்துக்காக துரித முடிவுகள் எடுக்கப்படும்.

மாநில அரசு பணியாற்றும் விதத்தைப் பார்த்தால் ஏழை மக்களுக்கு குடிநீர் போய் சேர எத்தனை ஆண்டுகள் ஆகும் எனத் தெரியவில்லை. மண்ணின் மகள் முழக்கத்துக்கு திரிணமூல் அநீதி இழைப்பதையே இது காட்டுகிறது. அவர்களை மன்னிக்கலாமா? 

விவசாயிகள் மற்றும் ஏழைகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு நேரடியாக பணத்தை செலுத்திகிறது. ஆனால், பணம் சார்ந்த பயன்களைப் பெறும் திட்டங்கள் திரிணமூலின் மிரட்டிப் பணம் பறித்தல் கும்பலின் அனுமதியில்லாமல் ஏழை மக்களைச் சென்றடைவதில்லை. இதனால்தான், திரிணமூல் தலைவர்கள் பணக்காரர்கள் ஆகிறார்கள். சாதாரண குடும்பத்தினர் ஏழைகள் ஆகின்றனர்.

அம்பான் புயல் நிவாரணப் பணிகளுக்காக மேற்கு வங்க திரிணமூல் அரசுக்கு மத்திய அரசு ரூ. 1,700 கோடி வழங்கியது. மாநில அரசு அதில் வெறும் ரூ. 609 கோடியை மட்டுமே செலவிட்டது. மீதமுள்ள ரூ. 1,100 கோடியை திரிணமூல் கையாடல் செய்துவிட்டது."

மேற்கு வங்க மாநிலத்தில் ஓரிரு மாதங்களில் பேரவைத் தேர்தல் வரவுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் திரிணமூல் இடையே கடும் போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags : modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT