இந்தியா

தாத்ரா - நாகர் ஹவேலி எம்.பி. உடல் இறந்த நிலையில் கண்டெடுப்பு

22nd Feb 2021 04:51 PM

ADVERTISEMENT


தாத்ரா - நாகர் ஹவேலி எம்.பி. மோகன் எஸ். டெல்கர் உடல் மும்பையில் விடுதியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மரணத்திற்கான முதற்கட்ட காரணம் தற்கொலை என சந்தேகிக்கப்படுகிறது.

மோகன் எஸ். டெல்கர் எதற்காக மும்பை வந்தார், அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட தெற்கு மும்பையிலுள்ள விடுதியில் அவர் ஏன் தங்கினார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர். அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

பாரதிய நவசக்தி கட்சியின் தலைவரான அவர் 2019 முதல் தாத்ரா-நாகர் ஹவேலி எம்.பி.யாக உள்ளார். முன்னதாக இவர் காங்கிரஸில் இருந்தார்.

ADVERTISEMENT

Tags : Dadra MP
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT