இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் இருவர் கைது 

20th Feb 2021 01:25 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். 

பாப்பச்சன்-பந்திப்போரா பாலம் அருகே பாதுகாப்புப் படையினர் ஒரு சோதனைச் சாவடி அருகே தடைசெய்யப்பட்ட அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

அவர்கள் இருவரும் வடக்கு காஷ்மீர் பந்திபோராவில் வசிக்கும் அபிட் வாஸா மற்றும் பஷீர் அகமத் கோஜர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

பந்திபோராவில் பாதுகாப்புப் படையினர் மீது குண்டு வீசியபோது பாதுகாப்புப் படையினர் அவர்களை கைது செய்து குண்டுகளை மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT