இந்தியா

திஷா ரவி ஜாமீன் மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு

20th Feb 2021 06:28 PM

ADVERTISEMENT


சூழலியல் ஆர்வலர் திஷா ரவி தில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் பிப்ரவரி 23-ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் தொடர்பான 'டூல் கிட்' வழக்கில் சூழலியல் ஆர்வலர் திஷா ரவி கடந்த 13-ம் தேதி பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். அவர் 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, நீதிமன்றக் காவல் நேற்று (வெள்ளிக்கிழமை) மேலும் 3 நாள்கள் நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே, தில்லி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி திஷா ரவி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Disha Ravi Tool Kit
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT