இந்தியா

நாட்டில் கரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாவட்டம் 'தாணே'

20th Feb 2021 11:31 AM

ADVERTISEMENT

நாட்டில் அதிக அளவில் கரோனா பாதிப்பு பதிவாகும் மாவட்டமாக தாணே மாவட்டம் உள்ளது. அங்கு நேற்று மட்டும் 471 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,59,668-ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய (பிப்.19) நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

தாணே மாவட்டத்தில் கரோனா இறப்பு விகிதம் 2.40 சதவிகிதமாகவுள்ளது. இதுவரை 2,49,566 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 96.11 சதவிகிதமாக உள்ளது. தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு 3,875 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : கரோனா Thane COVID 19
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT