தெலங்கானா மாநிலத்தில் சமீபமாக கரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 157 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,97 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக பொதுச் சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குநர் கூறுகையில்,
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு ஒருவரும் பலியாகவில்லை. நாட்டில் இதுவரை 1,612 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா பாதித்து இதுவரை 2,94,097 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, மீட்பு விகிதம் 98.87 ஆகவும் உள்ளது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 1,715 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 23,702 மாதிரிகள் சோதனை செய்துள்ளதையடுத்து நாட்டில் மொத்தம் 84.33 லட்சம் சோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.