இந்தியா

மாநில நாளை முன்னிட்டு அருணாசலம், மிசோரம் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

20th Feb 2021 03:17 PM

ADVERTISEMENT


அருணாசலப் பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு இரு மாநில மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அருணாசலப் பிரதேசத்தின் மாநில நாளை முன்னிட்டு மாநில மக்களுக்கு பிரதமர் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், “மாநில நாளை முன்னிட்டு அருணாசலப் பிரதேச மாநிலத்தின் அற்புதமான மக்களுக்கு எனது வாழ்த்துகள். தங்களது கலாசாரம், வீரம், இந்தியாவின் வளர்ச்சிக்கான வலிமையான உறுதித்தன்மைக்கு அருணாசலப் பிரதேச மாநில மக்கள் பிரசித்தி பெற்றுள்ளனர்.

வளர்ச்சியின் புதிய உச்சங்களை அருணாசலப் பிரதேசம் அடையட்டும்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநில நாளை முன்னிட்டு மிசோரம் மக்களுக்கு பிரதமர் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், “மாநில நாளை முன்னிட்டு மிசோரம் மாநிலத்தின் சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள். மீசோ கலாசாரத்தை எண்ணி முழு நாடும் பெருமை கொள்கிறது. தங்களது இரக்க குணத்திற்கும், இயற்கையுடன் இணைந்த வாழ்விற்கான உறுதிப்பாட்டிற்கும் மிசோரம் மாநில மக்கள் பெயர் பெற்றுள்ளனர். மாநிலத்தின் தொடர் வளர்ச்சிக்காக பிரார்த்தித்துக் கொள்கிறேன்”, என்று தனது சுட்டுரையில் மோடி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT