இந்தியா

இந்தியா - சீனா இடையே 10-ம் கட்டப் பேச்சு தொடக்கம்

20th Feb 2021 12:16 PM

ADVERTISEMENT

இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்சினை தொடர்பாக  10-ம் கட்டப் பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. மோல்டா என்ற இடத்தில் ராணுவ கமாண்டர் அளவில் பேச்சுவார்த்தை தொடங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து வீரர்கள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மற்ற பகுதிகளிலிலிருந்தும் வீரர்களை வெளியேற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

ஏற்கெனவே நடத்தப்பட்ட 9-ம் கட்டப் பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக்கில் இருந்து முன்கள வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.

கிழக்கு லடாக்கில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் இரு தரப்புகளும் முன் அணிப் படைகளை விலக்கிக் கொள்வதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளதாக சீனா அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

இருநாட்டு ராணுவத் தளபதிகள் அளவிலான 9-வது சுற்று பேச்சுவார்த்தையில் இரு தரப்புகளும் எட்டிய ஒருமித்த கருத்தின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

எல்லையில் பதற்றத்தைத் தணித்து படைகளை பழைய நிலைக்கு கொண்டு செல்ல இருதரப்பு கமாண்டர்கள் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : இந்தியா சீனா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT