இந்தியா

நாகாலாந்து பேரவையில் முதல்முறையாக 'தேசிய கீதம்'

20th Feb 2021 11:57 AM

ADVERTISEMENT

நாகாலாந்து சட்டப் பேரவையில் 58 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக தேசிய கீதம் பாடப்பட்டது. சட்டப் பேரவையில் ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாடப்பட்டது.

1963-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நாகாலாந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து 58 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப் பேரவையில் முதல் முறையாக தற்போது தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.

இதனை பாதுகாப்பு ஆலோசகர் நிதின் ஏ. கோகலே தனது சுட்டுரை பதிவில் பகிர்ந்துள்ளார். தேசிய கீதம் ஒலிக்கவிட்டு அதற்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து நின்ற விடியோ அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT