இந்தியா

மும்பையில் காவலர்கள் போல நடித்து ரூ.12 கோடி கொள்ளையடித்த 8 பேர் கைது

20th Feb 2021 05:53 PM

ADVERTISEMENT


மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், உணவகம் ஒன்றில், காவலர்கள் போல நடித்து ரூ.12 கோடியை கொள்ளையடித்துச் சென்ற 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புறநகர்ப் பகுதியான விலே பார்லேவில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் காவலர்கள் போல நுழைந்த நபர்கள், அங்கு சோதனை நடத்த வேண்டும் என்று கூறி, ரூ.12 கோடியை எடுத்துச் சென்றுள்ளனர். 

பின்னர் உணவக ஊழியர்கள் காவல்நிலையத்துக்கு வந்த போதுதான், அது காவல்துறை சோதனை அல்ல என்றும் கொள்ளைச் சம்பவம் என்பதும் தெரிய வந்தது. இது குறித்து உணவகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சியைக் கொண்டு அந்தக் கொள்ளை கும்பலை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில், கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT

Tags : mumbai hotel
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT