இந்தியா

விவசாய சங்கத் தலைவர்களுடன் கேஜரிவால் நாளை ஆலோசனை

20th Feb 2021 12:52 PM

ADVERTISEMENT


தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத் தலைவர்களுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நாளை (பிப்.21) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

இதில் வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும், போராட்டத்தில் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 80 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காஜிப்பூர், திக்ரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி அப்பகுதி மக்கள் அவ்வபோது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

எனினும் விவசாயிகளுக்குத் தேவையான குடிநீர், கழிவரை போன்ற அடிப்படை வசதிகளை ஆம் ஆத்மி அரசு ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் விவசாய சங்கத் தலைவர்களுடன் முதல்வர் கேஜரிவால் நாளை ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT