தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக்கின் 6-வது ஆட்சிக்குழுக் கூட்டம் சனிக்கிழமை காணொலி வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் பிரதமருடன் முக்கிய துறையைச் சோ்ந்த மத்திய அமைச்சா்கள், நீதி ஆயோக் ஆட்சிக்குழு உறுப்பினா்கள், மாநில முதல்வா்கள், துணை நிலை ஆளுநா்கள் ஆகியோர் காணொலி வாயிலாக கலந்துகொண்டுள்ளனர்.
இதில் முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி வாயிலாக பங்கேற்றுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் விவசாயம், கட்டுமானங்கள், உற்பத்தி துறைகள், மனித வள வளா்ச்சி போன்றவைகளோடு சுகாதாரம், சத்துணவு விவகாரங்களில் அடிமட்டத்திற்கு கொண்டு செல்லுதல் போன்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.