இந்தியா

ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் சாலை விபத்து: தந்தை, மகன் பலி

20th Feb 2021 11:16 AM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் ஜம்மு-பதான்கோட் நெடுஞ்சாலையில் வேனுடன் டிரக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தந்தை, மகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

விபத்தில் சிக்கிய இரு வாகனங்களும் கத்துவாவிலிருந்து வந்துகொண்டிருந்தன. அதிகாலை 2 மணியளவில் மன்சார் மோர் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்த விபத்தில் சம்பாவின் ராம்கர் பகுதியில் வசிக்கும் ஹான்ஸ் ராஜ் மற்றும் அவரது மகன் சோஹன் லால் (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

ADVERTISEMENT

மேலும் ரமேஷ் சந்தர் (60), ஹிமந்த் குமார் (35) மற்றும் கோரவ் குமார் (18) ஆகிய மூவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

Tags : ஜம்மு-காஷ்மீர் சாலை விபத்து Jammu and Kashmir
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT