இந்தியா

கரோனா விதிமீறல்: மும்பையில் இதுவரை 31.79 கோடி வசூல்

20th Feb 2021 12:35 PM

ADVERTISEMENT

மும்பையில் கரோனா விதிமுறைகளை மீறியதாக இதுவரை 31.79 கோடி பணம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிக அளவாக மகாராஷ்டிரத்தில் ஏராளமானோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்றிலிருந்து காத்துக்கொள்ளும் வகையில் விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே கரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பிப்ரவரி 19-ம் தேதி வரை மொத்தமாக ரூ.31,79,43,400 பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பொது இடங்களில் முகக்கவசம் அணியாததால் மட்டும் ரூ.15,71,679 வசூல் செய்யப்பட்டுள்ளது. 

நேற்று (பிப்.19) ஒரு நாளில் மட்டும் 13,592 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதால், முகக்கவசத்திற்கு இதுவரை மொத்தமாக ரூ.27,18,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT