இந்தியா

'மண்ணின் மகளே மேற்கு வங்கத்தின் விருப்பம்': திரிணமூல் தேர்தல் முழக்கம்

20th Feb 2021 05:38 PM

ADVERTISEMENT


'மண்ணின் மகளே மேற்கு வங்கத்தின் விருப்பம்' என்ற தேர்தல் முழக்கத்தை திரிணமூல் காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜி புகைப்படத்துடன் கூடிய தேர்தல் முழக்க பதாகைகள் கொல்கத்தா முழுவதும் காணப்பட்டன.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் பார்த்தா சாட்டர்ஜி இதுபற்றி கூறியது:

"பல்வேறு ஆண்டுகளாக முதல்வராக மக்களின் பக்கம் நின்ற மண்ணின் மகளையே மேற்கு வங்க மக்கள் விரும்புகின்றனர். மேற்கு வங்கத்துக்கு வெளியிலிருந்து வருபவர்கள் தேவையில்லை."

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் கட்சிக்கான முழக்கத்தை திரிணமூல் வெளியிட்டுள்ளது. பாஜகவைக் கடுமையாக எதிர்த்து வருவதையொட்டி 'மண்ணின் மகளே' என்ற முழக்கம் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags : Mamata Banerjee
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT