இந்தியா

உத்தரகண்ட் விபத்து: மேலும் 5 உடல்கள் மீட்பு

14th Feb 2021 07:16 PM

ADVERTISEMENT

உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் நேரிட்ட விபத்தில் மாயமானவர்களைத் தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், இன்று மேலும் 5 உடல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதனால், இதுவரை மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 43-ஆக அதிகரித்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் மிகப்பெரிய பனிப்பாறை சரிந்ததால் தவுளிகங்கா ஆற்றில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (பிப்.7) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கிளை நதிகளில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நீா் மின் நிலையங்களில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனர்.

ADVERTISEMENT

அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து 7-வது நாளாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால், அப்பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரெய்னி கிராமம் மற்றும் தபோவன் சுரங்கப்பாதையில் தலா 5 சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீட்புப் பணி முழு வீச்சில் நடைபெறுவதாக சாமோலி மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த துணை கமாண்டன்ட் ஆதித்யா பிரதாப் சிங் கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT