இந்தியா

குஜராத்தில் பிப்.18-இல் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

13th Feb 2021 06:51 PM

ADVERTISEMENT

குஜராத் மாநிலத்தில் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 18 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கத்தில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பின்னர் கரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து மத்திய அரசு அளித்த தளர்வுகளின்படி மாநில அரசுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறந்து வருகின்றன.

அந்தவகையில் குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 18 முதல் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்பின் போது மாணவர்கள் கட்டாயம் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Gujarat
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT