இந்தியா

உத்தரகண்டில் உருவாகியிருக்கும் ஏரி அபாயப் பகுதியல்ல: காவல்துறை டிஜிபி (ஏரியின் விடியோ)

13th Feb 2021 04:05 PM

ADVERTISEMENT


உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் ரெய்னி கிராமத்துக்கு அருகே உருவாகியிருக்கும் ஏரியை தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் இன்று நேரில் ஆய்வு செய்து அது அபாயப் பகுதியல்ல என்று தெரிவித்திருப்பதாக காவல்துறை டிஜிபி அஷோக் குமார் கூறியுள்ளார்.

ரெய்னி கிராமத்துக்கு அருகே உருவாகியிருக்கும் ஏரியை தேசிய மாநில பேரிடர் மேலாண்மைப் படையினர் ஆய்வு செய்தனர். தரைப் பகுதியிலிருந்து சுமார் 4,200 மீட்டர் உயரத்தில் நேற்று உருவான இந்த ஏரியிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறிவருகிறது. எனவே, இது அபாயப் பகுதியல்ல என்று அஷோக் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

 

அதேவேளையில், ரெய்னி கிராமத்தில் ஒரு ஹெலிகாப்டர் இறங்குளம் அமைப்பதற்கான பகுதியையும் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் கண்டுபிடித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

ஜோஷிமத் என்ற இடத்தில் ரெய்னி கிராமத்துக்கு அருகே வெள்ளிக்கிழமையன்று, ஒரு பெரிய ஏரி போன்ற நீர்நிலை உருவானது. இதனால் பெரும் அச்சம் ஏற்பட்டது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT