இந்தியா

விமானங்களில் நேற்று ஒரு நாளில் மட்டும் அதிகமானோர் பயணம்: ஹர்தீப் சிங் புரி 

13th Feb 2021 05:56 PM

ADVERTISEMENT

விமான சேவைகள் மீண்டும் தொடங்கியதில் இருந்து அதிகளவில் பயணிகள் மேற்கொண்டதாக விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் தில்லியில் கூறுகையில், 2,349 விமானங்களில் 2,97,102 பயணிகள் 2021 பிப்ரவரி 12 அன்று பயணம் மேற்கொண்டனர். 2021 மே 25 அன்று உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கியதில் இருந்து இது வரையிலான தினசரி பயணிகளின் எண்ணிக்கையில் இதுதான் அதிகம் என்று அவர் கூறினார். 
பாதுகாப்பான, சிறப்பான மற்றும் விரைவான சேவை ஆகிய காரணங்களால் விமானப் பயணத்தை மக்கள் விரும்புகின்றனர். இதன் காரணமாக பயணிகளின் எண்ணிக்கை கரோனாவுக்கு முந்தைய அளவுகளை எட்டி வருகிறது. 
2021 பிப்ரவரி 12 அன்று மொத்தம் 4697 விமான சேவைகள் இயக்கப்பட்டன. 5,93,819 பேர் விமான நிலையங்களுக்கு வந்திருந்தனர். கரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020 மார்ச் 24 முதல் நிறுத்தப்பட்ட விமான சேவைகள், 2021 மே 25 அன்று மீண்டும் தொடங்கின.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT