இந்தியா

தில்லி வன்முறை: செங்கோட்டைக்கு அழைத்துச் சென்று சித்துவிடம் விசாரணை

13th Feb 2021 04:00 PM

ADVERTISEMENT

குடியரசு நாளில் நடைபெற்ற சம்பவங்களை செய்து காண்பிக்க நடிகர் தீப் சித்துவை குற்றப்பிரிவு காவல்துறையினர் செங்கோட்டைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தில்லி டிராக்டர் பேரணியின் போது செங்கோட்டையில் கொடியேற்றி சீக்கிய மத உணர்வுகளைத் தூண்டி வன்முறைக்கு காரணமாக இருந்த தீப் சித்துவை கடந்த 9-ம் தேதி தில்லி சிறப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

சண்டிகர் மற்றும் அம்பாலாக்கு இடையிலான ஸிராக்பூர் பகுதியில் கைது செய்யப்பட்ட சித்துவை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து தில்லி கலவரத்திற்கு முக்கியக் காரணமான சித்து மற்றும் கைது செய்யப்பட்ட மற்றொருவரான இக்பால் சிங் ஆகியோரை குற்றப் பிரிவு காவல்துறையினர் தில்லி செங்கோட்டைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

குடியரசு நாளன்று செங்கோட்டையில் நடைபெற்ற சம்பவங்களை செய்து காண்பிக்க வலியுறுத்தி அதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

பஞ்சாப் மாநிலம் ஹோஸியார்பூர் பகுதியில் பிப்ரவரி 10-ம் தேதி இக்பால் சிங்கை தில்லி சிறப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT