மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 3,611 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,611 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,60,186 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு இன்று மேலும் 38 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 51,489 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 1773 பேர் குணமடைந்தனர்.
இதுவரை மொத்தம் 19,74,248 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 33,269 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ADVERTISEMENT