ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம், பொக்காரோ மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து அப்பகுதி காவலர்களுடன் சிஆர்பிஎஃப் வீரர்கள் இன்று தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.