இந்தியா

‘நாம் இருவர் நமக்கு இருவர் என நாட்டை ஆளும் 4 பேர்’: ராகுல் விமர்சனம்

11th Feb 2021 06:52 PM

ADVERTISEMENT

நாட்டை நாம் இருவர் நமக்கு இருவர் என்கிற வகையில் 4 பேர் ஆட்சி செய்து வருவதாக ராகுல்காந்தி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது பேசிய ராகுல்காந்தி வேளாண் சட்டங்கள் மூலம் பாஜக அரசு விவசாயிகள் பலரை பலி கொடுத்துவிட்டதாக குற்றம்சாட்டி இருந்தார்.

மேலும் மண்டி முறைகளை அழிப்பதற்காகவே வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும் மண்டிகளை பாஜக அரசு முழுமையாக ஒழித்துவிட்டது எனவும் அவர் தெரிவித்தார். 

நாம் இருவர் நமக்கு இருவர் என்கிற வகையில் நாட்டை நான்கு பேர் ஆட்சி செய்து வருவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

ADVERTISEMENT

ராகுல் காந்தி வேளாண் சட்டங்கள் குறித்து பேசியதால், மக்களவையில் பாஜகவினர் கூச்சல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். 

Tags : Rahul gandhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT