இந்தியா

கேரளத்திலிருந்து மகாராஷ்டிரம் செல்லும் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டாயம்

11th Feb 2021 12:37 PM

ADVERTISEMENT

 

மேற்கு வங்கு மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருவதையடுத்து, கேரளாவைச் சேர்ந்த பயணிகளுக்கு ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனையை மகாராஷ்டிர அரசு கட்டாயமாக்கியுள்ளது. 

புதன்கிழமை நிலவரப்படி கேரளத்தில் தற்போது 64,349 பேர் தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்துவருகின்றனர். நாட்டில் கரோனா பாதிப்பில் முன்னணியில் மகாராஷ்டிரா மாநிலம் இருந்து வருகிறது. 

தென் மாநிலத்தில் புதன்கிழமை நிலவரப்படி புதிதாக 5,980 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேரளத்திலிருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனை கட்டாயம் செய்துகொள்ளவேண்டும் என்று மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளதாக நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நிறுவன செயலாளர் அனூப் குமார் தெரிவித்தார். 

ADVERTISEMENT

பயணம் செய்யத் தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் இந்த சோதனை செய்யப்பட வேண்டும். 

கடந்த ஆண்டு நவம்பர் முதல் தில்லி, கோவா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் இதுபோன்ற சோதனைகள் ஏற்கெனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரத்தில் 3,451 பேருக்குப் புதிதாகத் தொற்று பரவியுள்ளது. இதையடுத்து கரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 20,52,253 ஆக அதிகரித்துள்ளது. இந்த நோய் காரணமாக மாநிலத்தில் இதுவரை 51,390 பேர் உயிரிழந்துள்ளனர்  என்று மாநில சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

Tags : Maharashtra coronavirus கரோனாவைரஸ் RT-PCR test
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT