இந்தியா

இந்திய மண்ணில் ஒரு அங்குலத்தைக் கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்: ராஜ்நாத் சிங்

11th Feb 2021 10:58 AM

ADVERTISEMENT


புது தில்லி: இந்திய மண்ணின் ஒரு அங்குலத்தைக் கூட யாரும் எடுத்துக் கொள்ள இந்திய ராணுவம் அனுமதிக்காது என்று மாநிலங்களவையில் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

கிழக்கு லடாக் பகுதியின் தற்போதைய நிலை குறித்து மாநிலங்களவையில் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, சீன ராணுவத்தின் அத்துமீறிய நடவடிக்கையால் லடாக் கிழக்குப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. லடாக் எல்லையில் எத்தகைய சோதனை ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது.

லடாக் எல்லைப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்க 9 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. முதல் 8 சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் ஏற்படாத நிலையில், இறுதியாக நடைபெற்ற 9-வது சுற்றுப் பேச்சுவார்த்தையில் பாங்காங் ஏரிக்கு அருகே தன்னுடைய பீரங்கிப் படைகளை விலக்கிக் கொள்ள சீன ராணுவம் ஒப்புக் கொண்டது. 

ADVERTISEMENT

படைகளைக் குவித்து அச்சுறுத்திய சீனாவை, இந்திய ராணுவத்தினர் தீரத்துடன் நின்று எதிர்கொண்டனர். அனைத்து நிலைகளிலும் சீன ராணுவத்தைவிட ஒரு படி மேலேதான் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டிருந்தது.

இந்திய மண்ணின் ஒரு அங்குலத்தைக் கூட யாரும் எடுத்துக் கொள்ள இந்திய ராணுவம் அனுமதிக்காது. லடாக் கிழக்கு எல்லைப் பகுதி விவகாரம் தொடர்பாக ராணுவ ரீதியாகவும், ராஜாங்க ரீதியாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

சீன பீரங்கிப் படைகள் திரும்பப் பெறுவதாக ஒப்புக் கொண்டதையடுத்து, அப்பகுதியிலிருந்து தனது படைகளை பின்வாங்கிக் கொள்ள இந்திய ராணுவமும் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் சீன ராணுவம் படைகளை திரும்பப் பெற்றால் மட்டுமே, இந்திய ராணுவம் தனது படைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
 

Tags : Eastern Ladakh Rajya Sabha rajnathsingh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT