இந்தியா

ராஜஸ்தான்: ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கரோனா

11th Feb 2021 03:42 PM

ADVERTISEMENT

ராஜஸ்தானில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் கடந்த ஜனவரி 18-ம் தேதி 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஜலவார், ஜல்ராப்தான், பவானிமண்டி ஆகிய பகுதிகளிலுள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதபோன்று ஜலவார் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.   

ADVERTISEMENT

கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளிகள் முழுவதும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்படுகிறது. மேலும் வகுப்பிலுள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Tags : ராஜஸ்தான் coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT