இந்தியா

அருணாச்சலப் பிரதேசத்தில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை

11th Feb 2021 04:44 PM

ADVERTISEMENT

அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த இரு தினங்களாக புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், மாநிலத்தில் இதுவரை 16,831 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
அவர்களில் 16,771 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். 
தற்போதைய நிலவரப்படி 4 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயம் கரோனாவுக்கு 56 பேர் பலியானார்கள். இதுவரை மொத்தம் 3,98,385 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் நேற்றும் மட்டும் 754 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. 
32,000 டோஸ் கரோனா தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ள நிலையில் 20,280 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT