இந்தியா

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதிய வேளாண் சட்டங்கள் ரத்து: பிரியங்கா காந்தி

11th Feb 2021 05:01 AM

ADVERTISEMENT


லக்னௌ: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா  காந்தி வதேரா தெரிவித்தார். 

உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் காங்கிரஸ் சார்பில் விவசாயிகள் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலர் பிரியங்கா பங்கேற்று பேசியதாவது: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை பிரதமர் மோடியும், பாஜக தலைவர்களும் அவமதித்துள்ளனர்.

அவர்கள் எதற்காக போராடி வருகின்றனர் என்பது மத்திய அரசுக்கு புரியவில்லை. அவர்களை தேச விரோதிகள் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் மத்திய அரசுதான் தேசத்துக்கு எதிரானது. பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் செல்ல நேரமிருந்தது; சீனா செல்ல நேரமிருந்தது. ஆனால் தனது சொந்தத் தொகுதியின் எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளை நேரில் சென்று சந்திக்க அவருக்கு நேரமில்லை. 

புதிய வேளாண் சட்டங்கள் தீமை விளைவிக்கக் கூடியவை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அந்தச் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்றார். 

ADVERTISEMENT

காங்கிரஸ் நடத்திய இந்தப் பொதுக்கூட்டத்தை பாஜக விமர்சித்தது. விவசாயிகளின் பெயரில் காங்கிரஸ் நாடகம் நடத்துவதாக அக்கட்சி தெரிவித்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT