இந்தியா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,923 பேருக்கு தொற்று

11th Feb 2021 09:55 AM

ADVERTISEMENT

 

புதுதில்லி: கரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், நாட்டில் 24 மணி நேர காலகட்டத்தில் 12,923 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 12,923 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,08,71,294-ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 108 போ் உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

கடந்த 5 நாள்களாக தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில், 108- ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் ஏற்பட்ட ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,55,360 -ஆக அதிகரித்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,05,73,372 போ் குணமடைந்தனா். நாட்டில் தற்போது 1,42,562 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

சுமாா் 3 வாரங்களாக கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாட்டில் இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொண்டோரின் எண்ணிக்கை 70,17,114 -ஆக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நாடு முழுவதும் கடந்த 10-ஆம் தேதி வரை 20,40,23,840 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை மட்டும் 6,99,185 பேருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : India coronavirus Total discharges
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT