இந்தியா

பிரதமரின் சென்னை பயணம்: பாதுகாப்பிற்காக 6 ஆயிரம் காவலர்கள்

11th Feb 2021 11:37 AM

ADVERTISEMENT

பிப்ரவரி 14 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதையொட்டி,  சென்னையில் 6 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். 

விமான நிலையம் அடையாறு ஐஎன்எஸ், நேரு விளையாட்டரங்கில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்படவுள்ளது.

தேசிய பாதுகாப்பு படை மத்திய உளவுத் துறை மாநில உளவுத் துறை தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். தேசிய பாதுகாப்புப் படையின் தென்மண்டல ஐஜி அலோக் வர்மா தலைமையில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது. 

வரும் ஞாயிற்றுக் கிழமை தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில், காலை 7.50 மணிக்கு தில்லியிலிருந்து புறப்படும் பிரதமர் மோடி காலை 10.35 மனிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வருகைதரவுள்ளார்.

காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 11.15 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு வருகைதரவுள்ளார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைத்து, அடிக்கல் நாட்டவுள்ளார்.

காவிரி - குண்டாறு இணைப்புத்திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்டவற்றை காணொலி வாயிலாக தொடக்கி வைக்கவுள்ளார்.

12.35 முதல் 12.50 வரை ஒய்வெடுக்கும் பிரதமர், 12.55 மணிக்கு மக்களை சந்தித்தவாறு விமான நிலையம் செல்லவுள்ளார். அங்கிருந்து கொச்சிக்கு அவர் செல்கிறார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் 6 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். விமான நிலையம் அடையாறு ஐஎன்எஸ், நேரு விளையாட்டரங்கில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்படவுள்ளது.

 

Tags : நரேந்திர மோடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT