இந்தியா

நாட்டில் 20.4 கோடியைக் கடந்த கரோனா பரிசோதனைகள்

11th Feb 2021 10:51 AM

ADVERTISEMENT


நாட்டில் 20.4 கோடிக்கும் கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில்  6,99,185 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதனால் இதுவரை மொத்தமாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,40,23,840-ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டில் மொத்தம் 2,369 பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இதில் 1,214 அரசு ஆய்வகங்களிலும், 1,155 தனியார் ஆய்வகங்களிலும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 

ADVERTISEMENT

Tags : coronavirus ICMR
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT