விவசாயிகளை பாஜக அரசு பலி கொடுத்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவை கூடியதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராகுல் காந்தி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, வேளாண் சட்டங்கள் மூலம் பாஜக அரசு விவசாயிகள் பலரை பலி கொடுத்துவிட்டது.
மண்டி முறைகளை அழிப்பதற்காகவே வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. மண்டிகளை பாஜக அரசு முழுமையாக ஒழித்துவிட்டது.
ADVERTISEMENT
ராகுல் காந்தி வேளாண் சட்டங்கள் குறித்து பேசியதால், மக்களவையில் பாஜகவினர் கூச்சல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.