இந்தியா

பிரதமர் மோடியுடன் பிகார் முதல்வர் சந்திப்பு

11th Feb 2021 06:17 PM

ADVERTISEMENT

பிகார் முதல்வர் நிதிஷ்குமார் பிரதமர் மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்து பேசினார்.

பிகார் முதல்வரான பிறகு முதன்முறையாக நிதிஷ் குமார் தில்லி சென்றுள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார். 

சுமார் ஒரு மணிநேரம் நடந்த இந்த சந்திப்பில் பிகார் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக புதன்கிழமை பிகார் முதல்வர் நிதிஷ்குமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : Nitish kumar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT