இந்தியா

சாலை விதி மீறல்: இரண்டரை மணி நேரத்தில் ரூ.43 லட்சம் அபராதம் வசூலிப்பு

11th Feb 2021 03:07 PM

ADVERTISEMENT


பெங்களூரு: பெங்களூரு மாநகர போக்குவரத்துக் காவல்துறை சார்பில் அதிரடி சோதனை திட்டம் நேற்று அமல்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், நகரின் முக்கியப் பாதைகளில் போக்குவரத்துக் காவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில் 4,665 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.43 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் பழைய சாலை விதிமீறல் தொடர்பாக பதியப்பட்ட 3,697 வழக்குகளிலும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது அனைத்தும் வெறும் 150 நிமிடத்தில் அதாவது இரண்டரை மணி நேரத்தில் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதுவும், முற்பகல் 11.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் ரூ.43,09,944 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் 4665 புதிய வழக்குகளுக்கு ரூ.30,65,150 அபராதமும், பழைய வழக்குகளில் ரூ.12.36 லட்சமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து போக்குவரத்துக் காவலர்கள் கூறுகையில், பிப்ரவரி 17-ஆம் தேதி வரை, முக்கியச் சாலைகளில் இவ்வாறு அதிரடி சோதனைகளை மேற்கொண்டு, பழைய வழக்குகளில் அபராதத்தை வசூலிக்கும் நடவடிக்கை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : Bengaluru
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT