மோசமான வானிலை காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதங்களில் 5,808 விமானங்களின் பயணங்கள் ரத்து அல்லது தாமதமாகி உள்ளன என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை மக்களவை கூட்டத்தொடரில் எழுப்பப்பட்ட வினாவிற்கு பதிலளித்துப் பேசிய மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதம் மோசமான வானிலை காரணமாக 1434 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் வானிலை காரணமாக 4374 விமானங்கள் தாமதமானதாகவும் தெரிவித்தார். விமானப் போக்குவரத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 43036 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற தகவலை அமைச்சர் பகிர்ந்து கொண்டார்.