இந்தியா

உணவு கொடுக்காமல் பூட்டிய அறைக்குள் 2 குழந்தைகள் சித்திரவதை: தந்தை, சித்தி கைது

11th Feb 2021 04:10 PM

ADVERTISEMENT


மலப்புரம்: கேரளத்தில், உணவு கொடுக்காமல் பூட்டிய அறைக்குள் இருந்து இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவத்தில் அவர்களது தந்தை மற்றும் சித்தி கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், மம்பட் பகுதியில், பூட்டிய அறைக்குள் இருந்து எலும்பும் தோலுமாக 10 வயது சிறுவனும், 5 வயது சிறுமியும் காவல்துறையினரால் மீட்கப்பட்டனர்.

அவர்களுக்கு உணவு கொடுத்து பல நாள்கள் ஆனநிலையில் பேசவும் திறனற்று, உடலில் ஆடை கூட இல்லாத நிலையில் பூட்டிய அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் உடனடியாக நிலம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தைகள் உடலில் காயங்கள் இருப்பதாகவும், பல நாள்களாக பட்டினியாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், குழந்தைகளின் தந்தை மற்றும் இரண்டாவது மனைவியைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது முதல் மனைவி சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்ட நிலையில், வேறொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.  இருவரும் சேர்ந்து முதல் மனைவிக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளையும் சித்ரவதை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் குழந்தைகளை மீட்டுள்ளனர்.

Tags : kerala child
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT