இந்தியா

உ.பி.யில் 6,7,8-ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் தொடக்கம்

10th Feb 2021 12:33 PM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசத்தில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து மாணவர்கள் பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மத்திய அரசு அளித்த தளர்வுகளுக்கேற்ப திறக்கப்பட்டு வருகிறது.

கரோனா விகிதம் குறைந்து வருவதற்கேற்ப அந்தந்த மாநில அரசுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளைத் திறந்து வருகின்றன.

அந்தவகையில் உத்தரப் பிரதேசத்தில் 6, 7 மற்றும் 8 ஆகிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று முதல் செயல்படத்தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT

9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT