இந்தியா

தில்லியில் கரோனா தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை 265ஆக அதிகரிப்பு

10th Feb 2021 08:59 PM

ADVERTISEMENT

தில்லியில் கரோனா தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை 265ஆக அதிகரிக்கப்படுவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்ஸின்’ கரோனா தடுப்பூசி மற்றும்  ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி ஆகியவற்றை அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த 3-ஆம் தேதி அனுமதி அளித்தது.

இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தில்லியில் 81 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதனைத் தொடர்ந்து படிப்படியாக அதிகரிக்கப்பட்ட தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை 183ஆக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் 82 புதிய கரோனா தடுப்பூசி மையங்களை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து தில்லியில் கரோனா தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை 265ஆக அதிகரித்துள்ளது. இந்த புதிய மையங்கள் வியாழக்கிழமை முதல் செயல்பாட்டு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : coronavaccine
ADVERTISEMENT
ADVERTISEMENT