இந்தியா

விவசாயிகளுக்கு ஆதரவு: பேரவைக்கு டிராக்டரில் வந்த எம்.எல்.ஏ.

10th Feb 2021 01:33 PM

ADVERTISEMENT

பஞ்சாபில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சட்டப் பேரவைக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் டிராக்டரில் வருகை புரிந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 75 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் சட்டப் பேரவையில் தீர்மானங்களும் கொண்டுவரப்பட்டன.

இந்நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினரான இந்திர மீனா விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சட்டப் பேரவைக்கு டிராக்டரில் வந்தார்.

ADVERTISEMENT

ஜெய்ப்பூரிலிருந்து விவசாயிகளுடன் டிராக்டரை ஓட்டிக்கொண்டே சட்டப் பேரவைக்கு வருகை புரிந்தார். தில்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை ஆதரிக்கும் வகையில் இதனைச் செய்ததாகவும் அவர் கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT