இந்தியா

கிழக்கு லடாக்கில் படைகள் விலக்கம்: சீனா

10th Feb 2021 07:56 PM

ADVERTISEMENT


கிழக்கு லடாக்கில் புதன்கிழமை முதல் இரு தரப்புகளும் முன் அணிப் படைகளை விலக்கிக் கொள்வதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

இருநாட்டு ராணுவத் தளபதிகள் அளவிலான 9-வது சுற்று பேச்சுவார்த்தையில் இரு தரப்புகளும் எட்டிய ஒருமித்த கருத்தின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சீன பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதுபற்றி இந்தியத் தரப்பில் எவ்விதத் தகவலும் வெளிவரவில்லை.

கடந்தாண்டு மே மாதம் கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், இரு நாடுகள் எல்லையிலும் படைகள் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து, இருநாட்டு ராணுவத் தளபதிகள் அளவில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.
 

ADVERTISEMENT

Tags : ladakh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT